Tuesday, April 6, 2010

ஜீன் டெஸ்ட் !!!!!


எதேச்சையாய்,
பையனின்,
'ஸ்கூல் பேக்'கை ப்
பிரித்தேன்.
தமிழ்ப் புத்தகத்தில்,
ஒரு மயிலிறகு,
என்னைப் பார்த்து
'நீயும் எனக்கு அரிசி
போடுகிறாயா' என்று,
சிரித்தது!!!
*
இன்னொரு பக்கம்...
'ப்ராக்ரஸ் ரிப்போர்ட்'
ஆறு சப்ஜெக்டில்,
நாலில் சிகப்பு பேனாவில்
அண்டர்லைன்!
பக்கத்திலேயே,
நான் போடாத
என் கையெழுத்து,
என்னைப் பார்த்து,
சிரித்தது!!!
*
பை நிறைய
ஏகப்பட்ட பென்சில்கள்..
எத்தனைப் பேரை
மிரட்டி வாங்கினானோ!
அத்தனை பென்சில்களும்,
என்னைப் பார்த்து,
சிரித்தன!!!
*
இப்போது எனக்கு
சிரிப்பு வந்தது,
என் ஜீன் அல்லவா!!!
*

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

//இப்போது எனக்கு
சிரிப்பு வந்தது,
என் ஜீன் அல்லவா!!!//

எனக்கு ஆச்சரியம் வந்தது. ஏதோ ஒரு அணு அளவு உள்ள ஜீனினால் எப்படி இவ்வளவு ஒற்றுமை வருகிறது - நமக்கும் நம் குழந்தைகளுக்கும்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

Chitra said...

Your gene has the strong trait of a good sense of humor. :-)

ரிஷபன் said...

ஆமா.. என் பென்சிலைக் கூட காணோம்..

aarvie88 said...

Ha Ha !!!!
Good one!!!

பாலா said...

hahahahahaha fine

பத்மா said...

நல்லா இருக்கு

http://learnersreference.com said...

very hilarious and wonderful karpanai

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடைசி பத்தி மட்டும் நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை. எனக்குத் தெரியும் ராமமூர்த்தி மிகவும் நல்லவர் என்று.

Dr. Srjith. said...

அருமை நண்பரே

Unknown said...

migavum nalla pathippu
http://www.healthdurbar.com