Sunday, July 18, 2010

இனி......


காது மடல் போலமைந்த...
கர்ப்ப வாச
நீள் துயில் கலைந்து,
எழும்பி,
கை பிடித்து,
பள்ளி...
காலேஜ் சென்று...
பட்டம் சுமந்து..
பதவி கூடி,
கைத்தலம் பற்றி...
கடிமணம் புரிந்து,
பிள்ளைகள் பெற்று...
மார்பிளில் வீடு,
'செல்'லுடன்..
க்ரெடிட்,டெபிட் கார்டு,
கலிஃபோர்னியா மாப்பிள்ளை...
(கம்ப்யூட்டர் டிகிரியில்),
ஃபாரின் டூர்..
(பாரிஸிலிருந்து,வெனிஸ் வரை)
ஹோண்டா சிடி..
'லாப்டாப்' இத்யாதி...
வலுவான உறவுகள்,
வசதியாய் வாழ்க்கை...
எல்லாம் போய்...
இன்று,
வாசலுக்கும்,உள்ளுக்குமாய்...
உறவுகள் காத்திருக்க,
கிழிந்த சீலையில்,
கை,கால் கட்டை விரல்கள்...
கட்டப் பட்டு,
மூக்கோட்டைகளில்..
பஞ்சடைத்து,
இல்லினாய்ஸிலிருந்து..
வரும்,
இளைய மகளுக்காக...
நட்ட நடு ஹாலில்,
நான்........!!!!!!!!!

8 comments:

அன்புடன் நான் said...

கவிதை மிக உணர்வுள்ளதாகத்தான் இருக்குங்க ...
ஆனா......
மார்பிளில் வீடு,
'செல்'லுடன்..
க்ரெடிட்,டெபிட் கார்டு,
கலிஃபோர்னியா மாப்பிள்ளை...
(கம்ப்யூட்டர் டிகிரியில்),
ஃபாரின் டூர்..
(பாரிஸிலிருந்து,வெனிஸ் வரை)
ஹோண்டா சிடி..
'லாப்டாப்' இத்யாதி...//

இவ்வளவு கலப்பு தமிழ்கவிதைக்கு ஆகாதுங்க.

கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

vasan said...

பேய்க்க‌ரும்பு ப‌ட்டின‌த்தார்
ரிப்பேரான‌ லேப்டாப்போட‌,
திருவெற்றியூரில், குட்டிப்ப‌சங்க‌ளுட‌ன்
பாடிய‌ பாட‌லாய் கேட்கிற‌து,
யார் குர‌ல், ஆர் ஆர் ஆர்?
அவரின் குர‌ல்தானே!!

வார்த்தை said...

நல்லாயிருக்கு


http://vaarththai.wordpress.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆரம்பத்தில் அழகிய கவிதை, நடுவில் அருமையான வருணனைகள், கடைசியில் கொன்னுப்புட்டீங்க அந்தப் கதாநாயகி அம்மாவை. ”

சரி அவ மகராசியாப் போய்ச் சேர்ந்துட்டா; நாம என்ன செய்வது; மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்; ஆளுக்கு ஒரு வாய் காஃபி கலந்து கொடுடீ; அழுவதற்கும் எல்லோருக்கும் தெம்பு வேண்டுமே” என டிக்கெட் கிடைக்காமல் அலறும் ஒரு பாட்டியின் சப்தம் அடுப்பங்கரையிலிருந்து எனக்குக் கேட்குது ! உங்களுக்கு ?

pinkyrose said...

எதார்த்தம்!

ரிஷபன் said...

காது மடல் போலமைந்த...
கர்ப்ப வாச
நீள் துயில் கலைந்து,
ஆஹா..

aarvie88 said...

nicely written!!!!

ஸ்ரீராம். said...

ஹா....