Tuesday, March 22, 2011

ஜெயந்தி சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்

(கவிதாயினி ஜெயந்தி சிவக்குமார் ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன்.அதில் உள்ள கருத்தாழம் என்னை மெய்சிலிர்க்க வைக்க, நம் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

**

மரங்களை விற்று,
அப்பா வாங்கினார்,
மின் விசிறி !!!

***

வீட்டிற்கு வந்த,
விருந்தாளிகளை,
விடியலில் எழுப்பியது,
கோழி ஒன்று,
நாம்
விருந்தாவோம்
என்று
அறியாமலேயே!!!

****

மழை வரம் வேண்டி,
பூஜை செய்தது,
இலைகளை உதிர்த்து,
மரங்கள்!!!!

*****

யார் கண் பட்டதோ?
சுக்கு நூறாய் உடைந்தது,
திருஷ்டிப் பூசணிக்காய் !!!!!

******

கடைசியில்,
கடவுள் கண் திறந்தார்,
சிற்பியின் உளியினால் !!!!

******

இஸ்திரி போடுபவரின்,
வயிற்றில்,
வறுமை ஒரு
கோடாய் இழுக்க,
துணிகளுக்கு,
கிடைத்தது,
கஞ்சி!!!!!

21 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஹைகூ கவிதைகள். பகிர்வுக்கு நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சார், அனைத்துமே வெகு அருமையாக உள்ளன. எழுதியவருக்கும், எனக்கு அதை எடுத்துரைத்த தங்களுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

என் மார்க்: 100/100

ரிஷபன் said...

அருமையான கவிதைகள்..
வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஆர்.ஆர்.ஆர் வாழ்க.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இவை எல்லாவற்றிலுமே கவிதைகளுக்குரிய தரிசனம் இருந்தாலும் இறுதி வரியில் முடிக்கும்போது ஒரு புதிருக்குரிய விடையைச் சொல்வது போன்ற தொனி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அது கவிதைக்குரிய அமைதியைக் குலைக்கிறது.

எழுதப்பட்டவற்றிற்கும் எழுத நினைத்தவற்றிற்குமிடையே ஒருவேளை கவிதை ஒளிந்திருக்கிறதோ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது புதுக்கவிதையா, ஹைக்கூ கவிதையா என்றெல்லாம் வித்யாசம் கண்டுபிடிக்குமளவுக்கு எனக்குக் கவிதா ஞானம் கிடையாது.

இருப்பினும் மிகச்

சிறிய வரிகளில் சிந்திக்க வைக்கும் பெரிய கருத்துக்களாக உள்ளன.

எல்லாவற்றையும் விட மிகவும் எளிமையாக
எளிதில் புரிந்துகொண்டு புன்னகை புரியும் வண்ணம் உள்ளது என்பதே எனக்கான மகிழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது. அதுவே இதன் சிறப்பம்சம்.

தொடர்ந்து, படித்ததில் பிடித்ததை இதுபோல எங்களுக்கும் கொஞ்சம் எடுத்து விடுங்க.

அன்புடன் vgk

middleclassmadhavi said...

எல்லாக் கவிதைகளுக்கும் ஊடாக ஒரு இழை ஓடுகிறது. அருமை!

ADHI VENKAT said...

நல்ல ஹைகூ கவிதைகளை பகிர்ந்தததற்கு நன்றி சார்.

ஹ ர ணி said...

கவிதைகள் எதார்த்தமாக இருந்தன. www.theensittu.blogspot.com எனும் என்னுடைய இன்னொரு வலைப்பூ முழுக்க துளிப்பாக்களுக்காக உள்ளது. வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

கிருஷ்ணப்ரியா said...

நல்ல கவிதைகளை படிக்கத் தந்த உங்களுக்கும். அருமையாய் எழுதியிருக்கும் ஜெயந்தி சிவக்குமாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@வெங்கட்: மிக்க நன்றி, வெங்கட்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@வை.கோ: ஸார்..இந்த மாதிரி சின்ன சின்னதா எழுதணும்னு பார்க்கிறேன், நானும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவர்களுக்கு ஒரு ஃப்லாக் இருக்கிறது..அதிலிருந்து எடுத்தது தான் இது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@சுந்தர்ஜி: ஆம் சுந்தர்ஜி, அதில் தான் ஒளி(ர்)ந்திருக்கிறது,கவிதை ந்யம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@வை.கோ: ஆம் ஹைக்கூவின் பலமே ஒரு காப்ஸ்யூலில் அத்தனையையும் அடக்குவது தானே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@மிடில்க்ளாஸ் மாதவி: தங்கள் ரசனைக்கு நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@ கோவை2தில்லி : இதைப் போல் நச்னு எழுத நானும் ட்ரை பண்ணுகிறேன்..பார்ப்போம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@ நாகசுப்ரமணியம்: மிக்க நன்றி ஸார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@ஹரிணி: ஐயா..ஹரிணி என்ன ஒரு வார்த்தை சொல்லாடல்! துளிப்பாக்கள்..அருமை..அருமை..அருமை ஐயா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

@ கிருஷ்ணப்ரியா: வரணும்...முதன்முதலா வந்திருக்கீங்க...அடிக்கடி வரணும்!

சிவகுமாரன் said...

அருமை.
அதிலும் கஞ்சி - சுவைத்தேன். (நெருடுகிறதே -- வறுமையை சொல்லும் கவிதையை சுவைத்தேன் என்று சொல்வது முறையாகுமா ?)

lakshmi said...

simply superb....