Friday, July 8, 2016

மகாமகம் 2016

கும்பகோணம் மகாமகம்....
---------------------------
கும்ப கோணம் மகா மகத்திற்கு, திருச்சி மலைக் கோட்டை தெற்கு வீதி ஜகதீச சாஸ்திரிகளின் பார்யா பட்டம்மாள், வலங்கை மான் பக்கத்தில் மாத்தூர் என்ற கிராமத்திலிருந்து அம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் சுவாமி நாதன், அவர்களது தங்கை கல்யாணி, வந்திருக்கிறார்கள்.....
கல்யாணிக்கு கல்யாணம் ஆகி விளையாட்டு போல, இரண்டு வருடங்கள் ஆகி விட்டது...குழந்தை பாக்கியம்.... ஊகூம்....
குளக்கரையில், சாஸ்திரிகள் சப்த கன்னியருக்கு ஏதோ பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்...
அவர் முன் ஏழு கும்பம், அரிசி, பருப்பு,வாழைக்காய், உருண்டை வெல்லம்..என்று நைவேத்தியத்திற்கு 
உரிய பொருட்கள்...பெரிய பெரிய தலை வாழை இலைகளில் வைக்கப்பட்டு...
"நல்லா வேண்டிக்குங்கோ...இந்த குழந்தைக்கு புத்ர பாக்யம் உண்டாகும்"
சாஸ்திரிகள் சொல்ல, மூவரும் மனமுருகி வேண்டிக் கொள்ள, சாஸ்திரிகள் அவர்கள் முகங்களில் கும்பத்திலிருந்து ஜலத்தை, மாவிலையால் தெளிக்க....
......................................
(ஐம்பத்தொம்பது வருடங்கள் கழித்து, மறுபடியும் ஒரு மகாமகம் இந்த 2016 ல்)

"அம்மா...அம்மா..."
"யாரு?"
"ஶ்ரீதர்"
"ஶ்ரீதரா....இப்பத்தான் அம்மா சொல்லிண்டிருந்தா, சினிமா மாதிரி டக்னு வந்து நிக்கறே..இதென்ன கையில்?" - அண்ணா.
"கும்ப கோணம் மாமாங்கம் போயிருந்தேன்...அங்கேர்ந்து தீர்த்தம், கொண்டு வந்திருக்கேன்..கார்த்தால குளிக்கும் போது,ப்ரோக்ஷணம் பண்ணிக்கோங்கோ!"
அம்மா கண்களில் திடீரென கண்ணீர்...
"இந்த மாதிரி ஒரு மாமாங்கம் போது தான் நான், அம்பி மாமா,பட்டுப் பெரியம்மா மூணு பேரும்
அங்கே சப்த கன்னியருக்கு ஏதோ பரிகாரம் செய்ய...."
அம்மா சொல்ல சொல்ல முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்!





7 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எதுவும் நம்பிக்கையைப் பொறுத்தே அமைகிறது. அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல.

வெங்கட் நாகராஜ் said...

அவருக்கு அவர் நினைவுகள்......

தி.தமிழ் இளங்கோ said...

மன்னிக்கவும். கதை எனக்கு கொஞ்சம் குழப்புகிறது. கும்பகோணம் மகாமகம் சென்றவர்களிடமே கும்பகோணம் மாமாங்கம் தீர்த்தம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி திரு ஜம்புலிங்கம் சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சரியாக சொன்னீர்கள் வெங்கட்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்போது மாற்றி விட்டேன், தமிழ் இளங்கோ சார்!
முன்னது ப்ளாஷ்பேக் ...
பின்னது இந்த வருடத்திய மகாமகம்....
தவறினை சுட்டிக்காட்டி காட்டியதற்கு மிக்க நன்றி!

G.M Balasubramaniam said...

எத்தனையோ பேர் கழுவின பாபங்களின் நீர் . நம்பிக்கைகளுக்கும் அர்த்தம் வேண்டும் இல்லையா சார்